தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா மற்றும் தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா இளைஞர் அணி மற்றும் அரிய வைச சமாஜம் சின்ன சேலம் இணைந்து நடத்தும் நித்திய மங்கள இலவச ஜாதக பரிவர்த்தனை திட்டம்.
இங்க திட்டம் 2019முதல் ஆரம்பிக்கப்பட்டது இதில் தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா இளைஞர் அணி முயற்சியுடன், சின்னசேலம் ஆரிய வைசிய சமாஜம் உதவி கொண்டு, கோபுர பூசு மஞ்சள் தூள் அன்பளிப்புடன் துவங்கப்பட்ட திட்டம், திட்டத்திற்கு எந்த ஒரு முதலீடும் மகாசபா & இளைஞர் அணி இதுவரை எதுவும் செய்யவில்லை அனைத்தும் நன்கொடை மூலமாக பெறப்பட்டு திட்டம் துவக்கப்பட்டது, கம்ப்யூட்டர், இன்டர்நெட், இடம் மற்றும் வேலை செய்யும் ஆட்கள் சம்பளம் அனைத்துமே சின்னசேலம் & கோபுரம் மஞ்சள் தூள் இணைந்து செய்யப்பட்ட திட்டம்,
இத்திட்டத்தின் பயன்கள்:-
1.தமிழ்நாடு முழுவதும் ஆரிய வைசிய சமாஜத்தில் இருக்கும் அனைத்து மக்களும் இலவசமாக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இதில் பதிவு செய்து கொள்ளலாம்,
2.மற்றும் நமக்கு தேவைப்படும் ஜாதகங்களை ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் நேரில் வந்தும் (அ) whatsapp மூலமாகவோ அவர்கள் பெற்றுக் கொள்ளலாம், திட்டம் இன்று வரை செம்மையாகவும் முறையாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
3. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1260-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நமது சமூகத்தில் நடைபெற்றுள்ளது இதில் இரண்டாம் கல்யாணமும் அடங்கும்.
4. 4500 ஆண்கள் ஜாதகங்கள், 3000 பெண்கள் ஜாதகங்கள் நமது நித்தியமங்கல ஜாதக பரிவர்த்தனையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு சின்னசேலத்தை சேர்ந்த அம்பி (எ) தண்டாயுதபாணி.(+919976975935) 2019 லிருந்து 2022 வரைக்கும் திட்ட தலைவராக செயல்பட்டு, சிறப்பாக செய்து வந்தார் இப்போது அம்பி அவர்களை மகா சபா திட்ட தலைவராகவும், 2023லிருந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த பி.பாலாஜி.(9965934585). அவர்களை இளைஞர் அணி திட்ட தலைவராகவும் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மிக மிக மிக முக்கியமான திட்டம் இன்றைய இளைஞர்களுக்கு அங்களுக்கு பொருந்திய நட்சத்திரத்தில் உடனே 250 – 300 ஜாதகங்கள் கிடைக்கும் என்றால் அது நித்திய மங்கள இலவச ஜாதக பரிவர்த்தனை மூலமா மட்டுமே கொடுக்கப்பட முடியும், அதனால் தமிழ்நாடு நித்திய மங்கள இலவச ஜாதக பரிவர்த்தனையை தொடர்ந்து நடத்துவதற்கு செம்மையாக உதவுமாறு பணிவான வணக்கங்களுடன் கேட்டுக்கொள்கிறேன்.