நமது தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபாவானது பல ஆண்டுகளாகவே இயங்கி வருகிறது சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நமது  வைஸ்யர்களின் ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்காகவும் மகாசபா இயங்கி உள்ளது அந்த காலகட்டங்களில் நமது வைத்தியர்களின் அனைத்து விசேஷ காரியங்கள் நடைபெறுவதற்கு சிறிய அளவில் மட்டுமே மண்டபங்கள் அந்தந்த ஊரில் இருந்தன அந்த விசேஷத்திற்கான வேலைகளை சாப்பாடு பரிமாற இதர வேலை கள் செய்வதற்காக ஆங்காங்கே இளைஞரணி சிறிய அளவில் உருவாகியது ஒவ்வொரு நகரம் மற்றும் மாவட்டத்தில் மட்டுமே சிறிய அளவில் உருவாகி இருந்தது அந்தக் காலத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே பெரிய சங்கம் இளைஞர் சங்கம் என்ற அமைப்பு இருந்தது வேறு எந்த சமூகத்தினருக்கும் இதுபோன்ற ஒருங்கிணைந்த அமைப்பு சங்கங்கள் இல்லை இந்த சூழ்நிலையில் நமது சமூக ஒற்றுமைக்காகவும் ஒருங்கிணைக்கவும் 1982 ஆம் ஆண்டு திரு நரசிம்மன் அவர்கள் மாநில அளவில் இளைஞர் அணியை உருவாக்கினார். மாநில இளைஞர் அணி அவர்களின் வேலை பொறுப்பு செயல்பாடு அனைத்தையும் அவரே வகுத்தார் சில இடங்களில் அறிமுகப்படுத்தினார் இந்த அமைப்பு யுவ ஜனா சங்கம் என்றே அழைக்கப்பட்டது காலப்போக்கில் அது மருவி இளைஞர் அணி என்று அழைக்கப்பட்டது அதன் பிறகு திருவண்ணாமலையை சேர்ந்த திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அதிக ஆண்டு பணியாற்றி முதன்முதலாக வைஸ்யா ஒலிம்பிக் மற்றும் வைஸ்ய ஜாதக பரிவர்த்தனை இந்த இரண்டு முத்தான திட்டங்களை தமிழக அளவில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தினார் அதன்பிறகு ஸ்ரீமுஷ்ணம் பிஇ பிரகாஷ் என்பவர் மாநில தலைவராக பொறுப்பேற்றார் இவர் காலகட்டத்தில் தான் செயலாளர் மற்றும் பிஆர்ஓ மாவட்ட தலைவர்கள் ஆகியோரை நியமித்து அனைத்து ஊர்களில் இருந்து மாநில தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்கள் மூலமாகவே அனைத்து செயல்பாடுகளையும் அந்தந்த ஊர்களுக்கு தெரியப்படுத்தினார் அதன் வகையில் பத்து முதல் 12 மாவட்டங்களில் மிகவும் சிறப்பான தலைவர்களை தேர்ந்தெடுத்து பணியமர்வு செய்தார் அவர்கள் மூலமாகவே இளைஞர் அணியின் திட்டங்களை நமது வைத்திய மக்களுக்கு கொண்டு சென்று வழி நடத்தும் படி செய்தார் அச்சமயத்தில் தான் வையத் தலைமை கொள் என்பதன் படி நமது திட்டமான வைசியா ஒலிம்பிக் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊர் மக்களும் அறியும் வண்ணம் கொண்டு சென்று அனைவரும் பங்கேற்கும் வண்ணம் 12 விதமான விளையாட்டுக்களோடு சரியான விளையாட்டு விதிகளின்படி வைசியா ஒலிம்பிக் வெற்றி கரமாக செய்து முடித்தார் முதன்முதலாக இளைஞர் அணியின் திட்டத்தை மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரிய மேடையில் மிக அதிக அளவிலாக ஒலிம்பிக்கை நடத்திய பெருமை பி பிரகாஷ் அவர்களையே சாரும். இவருக்கு பிறகு நமது இளைஞர் அணி மாநில தலைவராக மதுரையைச் சேர்ந்த திரு கதிரேசன் என்பவர் பணியேற்றார் இவரது காலகட்டத்தில் தான் புரோட்டோகால் புதிய நெறிமுறையை வழிவகுத்தார் அதன்படி மாநில இளைஞரணிக்கான வயது வரம்பை நிர்ணயித்தார் மேலும் மாவட்ட தலைவர் மற்றும் மாநில தலைவருக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட வைஸ் பிரசிடெண்ட் மற்றும் ஜூன் அட்மினிஸ்ட்ரேட்டர் அவர்களை தேர்ந்தெடுத்தார் ஈசி பாடி அமைத்து வழி நடத்தினார் ஜேசிஐ ரோட்டரி போன்ற பெரிய அமைப்புகளின் படி செயல்படும் விதமாக எக்ஸிக்யூட்டிவ் கமிட்டி அமைத்து அதன் மூலம் கூட்டத்திற்கான நேரம் அறிக்கை செயல்பாடு நிகழ்ச்சி நிரல் அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினார் இவரது காலத்தில் மரம் நடுவோம் இணைந்தே வளர்வோம் மற்றும் வைஸ்ய ஒலிம்பிக் இந்த இரு திட்டங்களையும் மாபெரும் வெற்றி அடையச் செய்தார்.

இந்த வைஸ்ய ஒலிம்பிக் ஆனது மிகப் பிரம்மாண்டமாக 3500 வைசியா போட்டியாளர்களைக் கொண்டு இரண்டு நாட்கள் தொடர் விளையாட்டுகளை நடத்தி மிக விமரிசையாக வெற்றிகரமாக நடத்தினர் அதுபோலவே மரம் நடுவோம் இணைந்தே வளருவோம் என்ற திட்டத்தில் 20800 மரக்கன்றுகள் ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊர்களில் மரக்கன்றுகளை ஊன்றி இத்திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்தனர் அதன்பிறகு முன்னால் தமிழக ஆளுநர் ரோசையா அவர்கள் ஆளுநராக பதவி வகிக்கும் போது ராஜ் பவனில் நிகழ்ச்சி ஒன்று திரு கதிரேசன் அவர்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது ஒரு வைஸ்ய  நிகழ்ச்சியானது ராஜ் பவனில் நடைபெற்றது என்பது மாபெரும் பெருமைக்குரியதாகும். இந்த பெருமையானது திரு கதிரேசன் அவர்களையே சாரும்.

இவருக்கு அடுத்தபடியாக இந்த இளைஞரணி வழிநடத்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த திரு வினோத்குமார் அவர்கள் பொறுப்பேற்றார் அவரது காலகட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள நமது வைத்திய மக்களை கணக்கெடுத்து அறிந்து கொள்ளும் வண்ணம் வைசியா இ சென்சஸ் என்ற மாபெரும் திட்டத்தை உருவாக்கினார் நமது முன்னாள் ஆளுநர் திரு ரோசையா அவர்கள் தலைமையில் அவர் பதவியில் இருக்கும்போது சென்னையில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த வைசியா இ சென்சஸ் திட்டத்தை துவக்கி வைத்தார் இந்த திட்டத்தில் நமது வைத்திய மக்களின் விபரங்கள் மற்றும் எண்ணிக்கை அனைத்தும் உள்ளடங்கியவாறு உருவாக்கினார்.

 

இவர் வழியில் அடுத்தபடியாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த திரு ஆனந்த ராம்குமார் அவர்கள் மாநில தலைவராக பொறுப்பேற்றார் இவரது காலத்தில் இதற்கு முன் நடந்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து அனைத்து திட்டங்களையும் மேலும் சில புதிய திட்டங்களையும் செயல்படுத்தினார். அதன்படி சிகரம் தொடுவோம் என்ற திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்ட வைஸ்ய மாணவ மாணவர்களை கொண்டு சேலம் வைசியா கல்லூரியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வெற்றியடைய செய்தார்

 

அதன் பிறகு இந்த உலகத்தையே திருப்பி போட்டு அனைவரையும் அச்சமரம் செய்த கொரோனா காலகட்டம் வந்தது அந்த சூழ்நிலையிலும் மனம் தளராது நமது சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை சிறப்பாக செய்து முடித்தார் அதில் முதலாவது வைசியா CAD        என்ற திட்டத்தை துவக்கி அதன்படி நமது வைஸ்யா அனைவரையும் ஒருங்கிணைத்தார் மேலும் நமது துணை கொண்டு கொரோனாவில் இருந்து வீட்டில் இருந்தபடியே தன்னை எவ்வாறு காத்துக் கொள்வது மேலும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு சரி செய்வது என்பது குறித்த விழிப்புணர்வு பதிவு களை online மூலம் ஏற்பாடு செய்தார். மேலும் படுக்கை வசதி தேவைப்படுபவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருதல் ஆகியவற்றை வைசியா சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் இணைந்து கோயம்புத்தூரில் 2000 படுக்கைகளை ஏற்பாடு செய்து தேவைப்படுவோருக்கு ஹெல்ப்லைன் மூலம் தகுந்த நேரத்தில் அனுப்பி உதவி செய்தனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பள்ளி செல்லாது வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் வீட்டிலிருந்து குருகுலம் என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தினார் மேலும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் ஆங்கிலம் சித்தா இதர துறைகள் ஜாம்பவான்களை கொண்டு தொடர்ந்து 15 நாட்கள் தினமும் இரண்டு மணி நேரம் ஆன்லைன் செமினாரில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றினார் .  5000 நபர்களுக்கும் மேலாக விஷ்ணு சகஸ்ரநாமம் ஆன்லைன் மூலமாக கற்றுத் தரப்பட்டது கொரோனா காலகட்டத்தில் அந்த கடுமையான சூழலிலும் நம்மால் இயன்ற உதவிகளை அனைவருக்கும் கொண்டு சென்று மருத்துவம் உடல் நலம் ஆன்மீகம் முக்கிய குறிப்புகள் என பல்வேறு தகவல்களை தொலைபேசி மூலமாக மக்களுக்கு அளித்து சேவை புரிந்தனர் நம் இளைஞர் அணியினர் மேலும் வீட்டிலிருந்து குருகுலம் என்ற திட்டமானது ஒன்று முதல் 12 வரை பயிலும் குழந்தைகள் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை பல செயல்பாடுகளை செய்ய வைத்தனர் இந்த திட்டத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து 30 நாட்களுக்கும் செய்து பயன் பெற்று மகிழ்ச்சி அடைந்தனர் மற்ற அனைத்து திட்டங்களையும் விட தொடர்ந்து 30 நாட்கள் செயல்படுத்தி வெற்றியடைய செய்த பெருமை இந்த வீட்டிலிருந்து குருகுலம் திட்டம்

 

இவருக்கு அடுத்தபடியாக சின்னமனூரில் சேர்ந்த திரு ராஜேஷ் குப்தா அவர்கள் மாநில இளைஞரணி தலைவராக பணியேற்றார் இவர் அனைத்து தலைவர்களின் திட்டங்களையும் கைவிடாது செயல்படுத்தி நம் வைஸ்ய மக்களுக்கு சேவை ஆற்றும் வகையில் அனைத்தையும் செய்வதாக அறிவித்தார் அதன் வரிசையில் திரு அனந்தராம் குமார் அவர்களின் திட்டமான நித்திய மங்கல இலவச ஜாதக பரிவர்த்தனையை மேலும் மெருகேற்றும் வகையில் நவீனப்படுத்த உள்ளார் மேலும் இளைஞர் அணியின் திட்டங்களில் ஒன்றான சிகரம் தொடுவோம் என்ற திட்டத்தையும் 600 மாணவர்களைக் கொண்டு சேலம் வைஸ்யா கல்லூரியில் ஏற்பாடு செய்து அனைத்து வைஸ்ய மாணவ செல்வங்களும் பயன் பெறும் வகையில் வெற்றியடைய செய்தார்.

இளைஞர் அணியின் குறிக்கோள்

தற்போது உள்ள சூழ்நிலையில் இன்றைய தலைமுறையினருக்கு நமது சமுதாயத்தின் புனிதம் நடைமுறை கோட்பாடு சம்பிரதாயம் பெருமைகள் ஆகியவை பற்றியும் நமது வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சரித்திரம் பற்றியும் தெரியாத நிலை நிலவுகிறது. நமது சமுதாயத்தை பற்றிய செய்திகளை நாமே நம் குழந்தைகளுக்கு சொல்லித் தரும் கட்டாயத்தில் உள்ளோம் மேலும் நம் குல பெருமைகளை பாரம்பரியத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று அவர்களை வழிநடத்தி நமது வைத்திய பாதையில் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும். இதில் நமது இளைஞர் அணி முக்கிய பங்காற்றுகிறது பிராமணர்களை தவிர வேறு எந்த சமூகத்திற்கும் இதுபோன்ற இளைஞர் அணி என்ற அமைப்பு இல்லை இளைஞர் அணி நமது வைத்திய சமூகத்திற்கு முதுகெலும்பாக இருந்து செயல்படுகிறது அனைத்து தலைவர்களும் நமது குல பெருமையை பாரம்பரியத்தை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றனர் இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தி நமது தமிழ்நாட்டில் 100 நகரங்களுக்கும் மேலாக நமது இளைஞரணி அமைப்பு செயல்படுகிறது நமது மாநில இளைஞரணி யின் அனைத்து திட்டங்களையும் மாநிலத்திலிருந்து மாவட்டம் நகரம் ஊர் கிராமம் என அனைத்து வைசிய மக்களுக்கும் கொண்டு சென்று பயன்பெற ஒரு பாலமாக இருந்து செயல்படுகிறது கடந்த 30 வருடங்களாக இதுபோன்ற பல திட்டங்களுக்காக நமது இளைஞர் அணியினர் எந்த ஒரு நபரிடம் இருந்தும் ஒரு ரூபாய் கூட கட்டணம் பெறாமல் sponcers donation மூலமாக மட்டுமே பெற்று திட்டங்களையும் இலவசமாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது இந்த உன்னதமான சேவைகளைப் புரிந்து நமது சமூக வளர்ச்சிக்கு உதவும் நம் இளைஞர் அணியின் பெருமைகளை நாம் கண்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் மேலும் தற்போது உள்ள தொழில்நுட்பம் மூலம் வைசியா ஐ டீசல் ஜாபர் வைசியா என்டர்பேன்ட் இதுபோன்ற பல நவீன புதிய திட்டங்களை நமது மாநில தலைவர் திரு ராஜேஷ் கொண்டுவர உருவாக்கி வருகிறார் தமிழ்நாடு முழுவதும் நமது வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் 163 இடங்களில் உள்ளது மேலும் 200 க்கும் மேற்பட்ட வாசவி மஹால் நம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது நமது வாசவி மஹால் ஆரம்ப காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக தேனி அன்னதான சத்திரம் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள 1905 ம் ஆண்டிற்கான கும்பாபிஷேக பலகை என்று நூறு வருட பாரம்பரியத்தை நாம் கொண்டுள்ளோம்.
இன்றளவும் இவைகள் செயல்பட முக்கிய காரணம் நம் சமூக ஒற்றுமை மட்டுமே இது ஒற்றுமை மற்றும் நமது வரலாறு நமக்கு அடுத்து நம் சந்ததியினரும் தெரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும் என்பதே நம் இளைஞர் அணையின் முக்கிய நோக்கமாகும் மேலும் நம் அடையாளத்தை நாம் என்றும் அளிக்காமல் காக்க பாடுபட வேண்டும் இதன் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்கள் அனைவரும் இளைஞர் அணி உறுப்பினர்களே என திரு வினோத்குமார் அவர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்டது அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம் இந்த இளைஞரணி வெற்றிகரமாக இயங்குவதற்கு நமது நகர மகா சபா மாவட்ட மகா சபா மாநில மகாசபா என அனைவரும் தங்கள் பிள்ளைகளை இளைஞர் அணியில் சேர்த்து நமது சமூகத்திற்கு சேவை ஆற்ற செய்தால் மட்டுமே நமது இளைஞரணியை காப்பாற்ற முடியும் நமது இளைஞரணி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் மிகவும் பாடுபடுகிறோம் இன்றைய தலைவர்கள் முன்னால் தலைவர்கள் உடனடி முன்னாள் தலைவர்கள் மாநில தலைவர்கள் என அனைவரும் இளைஞர் அணியின் வளர்ச்சிக்காக உடன் இருந்து உதவி செய்ய தயாராக உள்ளோம் ஆனால் புதுப்புது இளைஞர் அணி உருவாக வேண்டும் தற்போது உள்ள தொழில் நுட்பத்தின் மூலம் செயல்படுத்த இக்கால இளைஞர்களின் அறிவு யோசனை ஆற்றல் திறமை உறுதுணை தேவைப்படுகிறது ஆகையால் அனைவரும் உள்ள நகர மகா சபா தலைவர்கள் தங்களது ஊரில் உள்ள இளைஞரணி ஊக்கப்படுத்தி உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

Youthwing Projects